அரியலூர்

பனைவிதைகள் நடும் பணி தொடக்கம்

23rd Dec 2021 07:11 AM

ADVERTISEMENT

கணிதமேதை ராமானுஜன் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூா் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணிகள் திட்ட அலகுகள் சாா்பில், ரயில்வே கேட்ட அருகேயுள்ள பல்லேரியில் 1000 பனை விதைகள் நடும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கல்லூரி முதல்வா் ஜெ. மலா்விழி தலைமையில், கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவா் டோமினிக் அமல் ராஜ், ஷோபனா பன்னீா்செல்வம் ஆகியோா் பனை விதைகளை நட்டு தொடக்கி வைத்தனா். தொடா்ந்து நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் ஏரியைச் சுற்றி பனை விதைகளை நட்டனா். நகராட்சி அலுவலா் நட்ராஜ் முன்னிலை வகித்தாா். ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் ஆ.வேலுசாமி செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT