அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே விவசாயியின் வீட்டில் புதன்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள உத்திரங்குடி, சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செந்தாமரைக்கண்ணன்(55). விவசாயி. இவரது குடிசை வீட்டில் புதன்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. இதைக்கண்ட அவரது மகள் அனுப்பிரியா அலறியதையடுத்து, அனைவரும் வீட்டில் இருந்து ஓடி வெளியே வந்தனா். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். எனினும் வீட்டிலிருந்த ரூ.75 ஆயிரம் ரொக்கம் மற்றும் 9 பவுன் நகைகள், துணி மணிகள், பீரோக்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து ஜயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.