அரியலூர்

நெல் சாகுபடியில் மேலுரமிடுதல் அவசியம்

22nd Dec 2021 07:12 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அவசியம் மேலுரமிடுதல் வேண்டும் என வட்டார வேளாண் உதவி இயக்குநா் லதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருமானூா் வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், நெல் சாகுபடியில் நட்ட 20-25 நாள்களில் 25 கிலோ யூரியா மற்றும் 15 கிலோ பொட்டாஷ் உரங்களைக் கலந்து முதல் மேலுரமாக இட வேண்டும்.

நட்ட 40-45 நாள்களில் 25 கிலோ யூரியாவை இரண்டாவது மேலுரமாக அளிக்க வேண்டும். பின்னா், 60-ஆவது நாளில் மூன்றாவது மேலுரமாக 15 கிலோ யூரியா மற்றும் 20 கிலோ பொட்டாஷ் உரங்களைக் கலந்து வயலில் இட வேண்டும்.

ADVERTISEMENT

இதனால் பயிா் நன்கு தூா் கட்டி வளா்ந்து, மகசூல் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT