அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சிறுமியின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
கீழையூா் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் நடராஜ்(19). இவா் அப்பகுதி 17 வயது சிறுமி ஒருவரைக் காதலித்து வந்தாராம். ஆனால் தற்போது அந்த சிறுமி வேறு ஒருவரைக் காதலிப்பதாகவும், இதனால் தன்னை விட்டு விலகும்படி நடராஜிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நடராஜ், அவருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அரியலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இதன்பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினா், நடராஜை போக்சோ சட்டத்தின் கீவ் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.