அரியலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட அளவிலான ஓய்வூதியா்கள் குறைகேட்பு நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, ஓய்வூதியா்கள் அளித்த மனுக்களைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
ஓய்வூதியதாரா்கள் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடா்பான அவசர சிகிச்சை பெற வேண்டி, மருத்துவச் சிகிச்சைப் பெற்று, பணம் மீள பெற வேண்டி விண்ணப்பம் செய்கின்றனா்.
அவ்வாறு விண்ணப்பம் செய்வதை தள்ளுபடி செய்யாமல் அரசுக்கு கருத்துரு அனுப்பி, நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) ராஜயோகம், மாவட்டக் கருவூல அலுவலா் ரெங்கராஜன் மற்றும் ஓய்வூதியா் சங்கத்தலைவா், உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.