அரியலூா்: அரியலூா் மாவட்ட ஆட்சியா் தனது இல்லத்திலிருந்து அலுவலகத்துக்கு நடந்தே சென்று காற்று மாசற்ற அலுவலக வாரத்தை திங்கள்கிழமை கடைப்பிடித்தாா்.
பெருநகரங்களில் காற்று மாசில் 72 சதவீதம் வாகன மாசு உள்ளது எனக் கணக்கீடு செய்து மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமானித்தது. எனவே மாசைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக அனைத்துவிதப் பணியாளா்களும் மாசற்ற அலுவலகப் பயண நாள் எனக் கடைப்பிடித்து தனி நபா் மோட்டாா் வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை என முடிவெடுத்துள்ளோம். இந்த நடைமுறையைச் செயல்படுத்தும் விதமாக அரியலூா் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி திங்கள்கிழமை தனது வீட்டில் இருந்து சுமாா் அரை கிலோ மீட்டா் தொலைவு நடந்தே ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்று தனது வழக்கமானப் பணியைத் தொடங்கினாா். முன்னதாக, அவா் தெரிவிக்கையில், இந்த முயற்சியினால் காற்று மாசு மற்றும் பசுமைஇல்ல வாயுக்களின் வெளியேற்றம் குறையும். போக்குவரத்து நெருக்கடி குறையும். உடல்நலம் கூடுதலாக வலுப்பெறும். எனவே அனைத்து அரசுத்துறை அலுவலா்கள் மோட்டாா் வாகனங்களைப் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.