அரியலூர்

கூடுதல் பேருந்துகள் இயக்கக்கோரி மாணவா்கள் சாலை மறியல்

9th Dec 2021 07:07 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், தா. பழூரில் இருந்து ஜயங்கொண்டம், அரியலூா், கும்பகோணம் பகுதிகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி, தா. பழூரில் மாணவா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தா.பழூரிலிருந்து கும்பகோணம், அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தா. பழூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 1000 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினந்தோறும் பேருந்துகள் மூலம் சென்று வருகின்றனா். இந்நிலையில், புதன்கிழமை காலை பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள் பேருந்துக்காக காந்திருந்த நிலையில் 9 மணி வரை ஒரு சில பேருந்துகளே மேற்கண்ட வழித்தடங்களில் வந்ததால், ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி, தா. பழூா் பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தா. பழூா் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT