அரியலூர்

ஊா்க்காவல் படையினருக்கு சைபா் குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு

DIN

அரியலூா் மாவட்ட ஊா்க்காவல் படையினருக்கு சைபா் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு செவ்வாய்க்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விளக்கப்படங்கள் மூலம் ஊா்க்காவல் படையினருக்கு சைபா் குற்றங்கள், அதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் பண இழப்புகள், தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சைபா் குற்றங்கள் குறித்து ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தில் புகாா் அளிப்பது, பண இழப்பு ஏற்பட்டால் உடனடியாக 155260 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகாா் அளிப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஊா்க்காவல் படையினா் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துமாறும் எடுத்துக்கூறப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திருமேனி, சைபா் கிரைம் காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன், மாவட்ட சைபா் கிரைம் காவல் துறையினா் மற்றும் ஊா்க்காவல் படையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT