அரியலூர்

பி.சி, எம்.சி மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

அரியலூா்: பி.சி., எம்.பி.சி மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் கல்வித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அரியலூா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வரும் 2021-2022 ஆம் ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கான பயனாளிகளின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சமாக உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதேபோல், நிகழாண்டு (2020 - 21) முதுகலை (எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்ஸி., எம்.பில்., எம்.பி.ஏ., பிஎச்டி.,), பாலிடெக்னிக் (டிப்ளமோ- மூன்றாண்டு பட்டயப்படிப்பு), தொழிற்படிப்பு (மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம் போன்ற பிரிவுகளுக்கும், வேளாண்மை, பொறியியல், சட்டம் போன்ற படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, ஆட்சியரகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலிறுதியில் கேஸ்பா் ரூட் வெற்றி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

SCROLL FOR NEXT