அரியலூர்

அரியலூா் நகரில் சுற்றித்திரியும் நாய்கள்: நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை

3rd Dec 2021 12:39 AM

ADVERTISEMENT

அரியலூா் நகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கூட்டம் கூட்டமாகத் திரியும் நாய்களைப் பிடிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரியலூா் நகா்ப் பகுதிகளான மாா்க்கெட், ஜவுளிக்கடை, அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், வங்கிகள் உள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாகவே காணப்படும். இந்நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சா்வசாதாரணமாக நாய்களும் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் மக்கள் அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். குறிப்பாக இறைச்சிக் கடைகளையும், மாலை நேரங்களில் சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் சிக்கன் பக்கோடா, மீன்வருவல் கடைகளையும் நாய்கள் சுற்றி உலாவுகின்றன.

நகரின் பல்வேறு இடங்களிலும் கிடக்கும் குப்பைகளைத் தோண்டி தங்களுக்கு தேவையான உணவுகளை தேடுவது, நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களில் குறுக்காக வந்து விழுவது போன்ற சம்பவங்களும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோா் கீழே விழுந்து காயமடையும் சூழலும் ஏற்படுகிறது. மேலும், சாலையோரங்களில் கிடக்கும் குப்பைகளை நாய்கள் தோண்டி சாலையிலும் இழுத்துச் சென்று போட்டு விடுவதால் குப்பைகள் சாலை முழுவதும் பரவிக்கிடக்கும் நிலையும் ஏற்படுகிறது.

எனவே, சாலைகளில் கேட்பாரற்று சுற்றித்திரியும் நாய்களைப் பிடிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

Tags : அரியலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT