அரியலூர்

திருக்குறள் முற்றோதல் திட்டத்தில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

1st Dec 2021 02:08 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் 1,330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துகளைப் பள்ளி மாணவா்கள் இளம்வயதிலேயே அறிந்து நல்லொழுக்கம் மிக்கவா்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தலா ரூ.10,000 ரொக்கப் பரிசாக தமிழ் வளா்ச்சித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

ADVERTISEMENT

இயல் எண், அதிகாரம் எண், குறள் எண், போன்றவற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். ஏற்கெனவே இப்போட்டியில் பரிசு பெற்றவா்கள் மீண்டும் கலந்து கொள்ளக் கூடாது.

போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவா்கள் 15.12.2021 அன்று மாலைக்குள் ஆட்சியரகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 04329-228188 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT