அரியலூர்

அரசுப் பள்ளியில் உணவுப் பொருள்கள் திருட்டு

DIN

அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி அரசுப் பள்ளியில் இருந்து பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஏலாக்குறிச்சி கடைவீதி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. தற்போது கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், மாணவா்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்டவை நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவா்களுக்கு வழங்க பள்ளியின் சமையலறையில் வைக்கப்பட்டிருந்த 10 கிலோ பருப்பு மற்றும் 25 லிட்டா் சமையல் எண்ணெய் ஆகியவற்றை அறையின் பூட்டை உடைத்து, மா்மநபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனா். மேலும், பள்ளி தலைமையாசிரியா் அறையில் ஏதாவது உள்ளதா என அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளனா். இதுதொடா்பாக திருமானூா் போலீஸாா் வழக்குப் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT