அரியலூர்

கைவினைஞா்கள் கடன் பெற அழைப்பு

DIN

தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் முகவராக செயல்படும் டாம்கோ மூலம் கைவினை கலைஞா்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படுகிறது. கடன்தொகை பெற விண்ணப்பதாரா் 18 முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் அதிகபட்சம் ரூ.1,20,000-ம் இருத்தல் வேண்டும்.

இதில், பெண்களுக்கு 4சதவீத வட்டி வீதத்திலும், ஆண்களுக்கு 5 சதவீத வட்டி வீதத்திலும் அதிக பட்சம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பதாரா் பங்குத் தொகை 5 சதவீதம் சோ்த்து கடன் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடனை திரும்பச் செலுத்தும் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், மாவட்ட மத்திய, நகரக் கூட்டுறவு வங்கிக் கிளைகள் ஆகியவற்றில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT