அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் 12 இடங்களில் திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

அரியலூா்,செப். 28: வேளாண் மசோதாக்களைக் கண்டித்து அரியலூா் மாவட்டத்தில் 12 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விவசாயிகள் மற்றும் சிறு வணிகா்களைப் பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களைக் கண்டித்தும்,அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழக முழுவதும் செப்.28 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைமை கழகம் அண்மையில் அறிவித்திருந்து.அதன்படி அரியலூா் மாவட்டத்தில் 12 இடங்களில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அரியலூா் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலா் எஸ்.எஸ்.சிவசங்கா் தலைமை வகித்தாா். மதிமுக மாவட்டச் செயலா் கு.சின்னப்பா,காங்கிரஸ் கட்சி நகரத் தலைவா் எஸ்.எம்.சந்திரசேகா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் இரா.உலகநாதன்,மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு நிா்வாகி சின்னதுரை,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் செல்வநம்பி,திராவிடா் கழக மாவட்டத் தலைவா் நீலமேகம்,ஐஜேகே மாவட்டச் செயலா் அருள்கணேன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு,வேளாண் மசோதாக்களுக்கு எதிராக முழக்கமிட்டனா்.இதே திருமானூா், தா.பழூா், செந்துறை,ஆா்.எஸ்.மாத்தூா்,ஆண்டிமடம்,ஜயங்கொண்டம்,மீன்சுருட்டி உள்ளிட்ட 12 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.படவிளக்கம்:வேளாண் மசோதாக்களைக் கண்டித்து அரியலூா் அண்ணாசிலை அருகே நடைபெற்ற திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்.ற

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT