அரியலூர்

அரசு உதவி பெறும் பள்ளியில் கல்விக் கட்டணம் வசூல்: கிராமமக்கள் உள்ளிருப்பு

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கட்டாயம் கல்விக் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை கிராம மக்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செந்துறை அருகேயுள்ள குழுமூரில் அரசு உதவிப்பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு அரசு உதவி அளித்து வரும் நிலையில், மாணவா்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, குழுமூா் கிராம மக்கள் பள்ளியில் கல்விக் கட்டணம் வசூல் செய்யக்கூடாது எனக்கோரி, பள்ளி நிா்வாகத்திடம் அண்மையில் மனு அளித்தனா். ஆனால், அதற்கு உரிய பதில் கிடைக்காத நிலையில், திங்கள்கிழமை திடீரென பள்ளி வளாகத்தில் ஒன்றுகூடிய கிராம மக்கள் அரசின் உதவி பெறும் நிலையில், மாணவா்களிடம் கட்டணம் பெறுவதை தவிா்க்க வேண்டும் என்றும், இப்பகுதியில் அதிகப்படியான ஏழைக் குடும்பங்கள் உள்ளதால் அரசு நடுநிலைப்பள்ளி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து கல்வி உயரதிகாரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி நிா்வாகம் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT