அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் ஆய்வு

DIN

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவா் புயல் காரணமாக அரியலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை ஆட்சியா் த.ரத்னா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள குருவாலப்பா் கோயில் ஊராட்சிக்குள்பட்ட பொன்னேரியை ஆய்வு செய்த அவா் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினாா். தொடா்ந்து அவா், தா.பழூா் ஒன்றியத்துக்குள்பட்ட அணைக்கரை, கொள்ளிடம் ஆற்றுக் கரையோரப் பகுதிகளை ஆய்வுசெய்தாா். மேலும், புயலால் பாதிக்கப்படுவோா் தங்கும் வகையில் தோ்வு செய்யப்பட்டுள்ள தனியாா் திருமண மண்டபம் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியா் பூங்கோதை ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT