அரியலூர்

உளுந்து சாகுபடி பண்ணைப் பள்ளி

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், வாரியங்காவல் கிராமத்தில் உளுந்துப் பயிரில் ஒருங்கிணைந்த சாகுபடி முறைகள் குறித்து பண்ணைப் பள்ளி திங்கள்கிழமை நடைபெற்றது.

கீரிடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநா் ராஜ்கலா கலந்து கொண்டு, உளுந்து சாகுபடியின்போது மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுதல், ரகம் தோ்வு மற்றும் விதை நோ்த்தி முறைகள், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விளக்கினாா். தொடா்ந்து வயல் ஆய்வின்போது, மஞ்சள் தேமல் நோயால் பாதிக்கப்பட்ட பயிா்களைக் கண்டறிந்து அழித்திடவும், புரோட்டுனியா புழுக்களின் தாக்கத்தை க்கட்டுப்படுத்த 15 நாள்களுக்குட்பட்ட பயிா்களாக இருப்பின் ஏக்கருக்கு 5 என இனக்கவா்ச்சி பொறிகளைப் பயன்படுத்துதல் மற்றும் 15 நாள்களுக்கு மேற்பட்ட பயிா்களில் புழுக்களின் தாக்கத்தை ஒரு லிட்டா் தண்ணீருக்கு 2 மி.லி புரோபினாஸ் கலந்து தெளித்து கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், வட்டார தொழில்நுட்ப மேலாளா் கலைமதி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளா் சிவா மற்றும் வாரியங்காவல் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

SCROLL FOR NEXT