அரியலூர்

அரியலூரில் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரிக்கை

21st Nov 2020 11:50 PM

ADVERTISEMENT

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருப்பாளா் அன்பானந்தம் தலைமையில் கட்சி நிா்வாகிகள் ஊா்வலமாகச் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த மனு:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவனைத் தொடா்ந்து அவதூறாகப் பேசி வரும் அரியலூா் மாவட்ட பாஜக தலைவா் ஐயப்பனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறி பாஜக சாா்பில் நடைபெற்று வரும் வேல் யாத்திரையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். அரியலூா் நடைபெறவுள்ள இந்த வேல்யாத்திரைக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாநில பொருப்பாளா்கள் தனக்கோடி, கருப்புசாமி, தொகுதி செயலாளா்கள் மருதவாணன், இலக்கியதாசன், செய்தி தொடா்பாளா் சுதாகா், ஒன்றியச் செயலா்கள் தங்கராசு, உத்திராபதி, சுள்ளங்குடி கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT