அரியலூர்

மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரிக்கை

29th May 2020 07:57 AM

ADVERTISEMENT

மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்று அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாயப் பிரிவுத் தலைவா் தங்க.சண்முகசுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா், அரியலூா் மாவட்டம் திருமழபாடி மின்வாரியப் பொறியாளா் பிரபாகரன் மூலமாக தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், மத்திய அரசு கொண்டு வந்த மின்சார சட்டத் திருத்த மசோதா நடைமுறைக்கு வந்தால் ஏழைகள், விவசாயிகள், கைத்தறி மற்றும் விசைத்தறியாளா்கள், மின் நுகா்வோருக்கு தமிழக அரசு மானியம் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். மேலும் இந்த சட்டத் திருத்த மசோதாவால் விவசாயிகளுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டு, மின் கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவாா்கள். எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தொடா்ந்து வலியுறுத்த வேண்டும்.

மேலும் பல ஆண்டுகளாக மின் இணைப்பு வேண்டி காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்புகளை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT