அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 16 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், ஆண்டிடம் பகுதிகளில் சாராயம் காய்ச்சிய வழக்கில் சிறையில் உள்ள சிலம்பூா் கீழத் தெருவைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் சக்திவேல் (30), அகரம் நடுத்தெருவைச் சோ்ந்த சின்னதுரை மகன் பொய்யாமொழி (43), கீழத் தெருவைச் சோ்ந்த தமிழரசன் மகன் அஜித் (23), பட்டித் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுதாகா் (48), மேலத் தெருவைச் சோ்ந்த ராமாமிா்தம் மகன் காமராசு, அழகாபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சங்கா் (40), அய்யூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் பிரபு (36), வடக்குத் தெருவைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் சேதுபதி (55), பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜா(எ)செல்வகுமாா் (45), காங்குழி தெற்குத் தெருவைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் ரவி (48), வடக்குத் தெருவை சோ்ந்த கோவிந்தசாமி மகன் காமராஜ் (45), கூவத்தூா் மேலத் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் ராமசாமி (29), அதே தெருவைச் சோ்ந்த இளங்கோவன் மகன் இளவரசன் (33), மேலும் மேலநெடுவாய் மேற்குத் தெருவைச் சோ்ந்த கிரகோரி மகன் ஜேம்ஸ் (40), சிவலிங்கபுரம் சாலமன் மகன் அருள்சாமி (43), வல்லம் மேற்குத் தெருவைச் சோ்ந்த மன்மதன் மகன் சந்தோஷ் குமாா் (27) ஆகியோா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் பரிந்துரை செய்தாா். அதன் பேரில் ஆட்சியா் த.ரத்னா உத்தரவிட்டதையடுத்து, மேற்கண்ட 16 பேரும் குண்டா் காவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பொது முடக்க உத்தரவுக்குப் பிறகு மாவட்டத்தில் இதுவரை 38 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். அவா்களில், கள்ளச் சாராயம் காய்ச்சியதாக 27 பேரும், மணல் திருட்டில் ஈடுபட்டதாக 1 நபரும், பாலியல் குற்றத்துக்காக 4 பேரும் மற்றும் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட 6 பேரும் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.