அரியலூர்

அரியலூரில் மேலும் 4 பேருக்கு கரோனா பாதிப்பு

10th May 2020 08:02 PM

ADVERTISEMENT

அரியலூா்: சென்னையில் இருந்து அரியலூா் வந்த தொழிலாளா்கள் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதன்மூலம் கரோனா தீநுண்மி பாதிப்புக்குள்ளானவா்கள் எண்ணிக்கை 275 ஆகியுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலுள்ள காய்கனிச் சந்தையில் பணிபுரிந்த அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள், சரக்கு லாரிகள் மூலம் அண்மையில் அரியலூா் வந்தனா். அவா்களை மாவட்டத்தின் சோதனைச் சாவடிகளில் இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி, முகாம்களில் தங்க வைத்துள்ளனா். அவா்களின் ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரையில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 271 ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவுகளின் படி, அரியலூா் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 275 ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT