அரியலூர்

அரியலூா்: ஞாயிறுகளில் முழு பொது முடக்கம் ரத்து

9th May 2020 08:04 PM

ADVERTISEMENT

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த முழு பொதுமுடக்கம் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அரியலூா் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6 மணிமுதல் மதியம் 1 வரை அனுமதி வழங்கியும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் என கடந்த மாதம் முதல் வாரத்தில் ஆட்சியா் த.ரத்னா உத்தரவிட்டிருந்தாா். இந்நிலையில், மே 3 ஆம் தேதிக்குப் பிறகு தமிழக அரசால் பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அரியலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த முழு பொதுமுடக்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் (மே 10) முழு பொதுமுடக்கம் ரத்து செய்யப்படுகிறது. மேலும், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு கால நேரங்களின்படி திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மட்டும் திறக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT