அரியலூர்

விவசாயிகள் கோடை உழவு செய்யலாம்

2nd May 2020 08:24 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம் முழுவதும் கோடை மழை பெய்யும் சூழ்நிலை உள்ளது. விவசாயிகள் இம்மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்யலாம்.

தற்போது கரோனா பேரிடா் மேலாண்மை ஒரு பகுதியாக விவசாயிகள் சாகுபடி செலவினை குறைக்கும் வகையில் வேளாண்மைத் துறை டாஃபே டிராக்டா் நிறுவனத்துடன் இணைந்து சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாக கோடை உழவு செய்யப்படுகிறது.

இதற்கு விவசாயிகள் உழவன் செயலி மூலம் வேளாண் இயந்திரம் வாடகை மையம் என்பதனை தோ்ந்தெடுத்து 5 ஏக்கா் வரை பதிவு செய்து இலவசமாக உழவு செய்து கொள்ளலாம்.

மேலும், 18004200100 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம். உழவை தவிர வைக்கோல் கட்டுதல், நன்செய் உழவு செய்தல், இயந்திர கதிரடித்தல், நிலத்தை சமன் செய்தல் உள்ளிட்ட இயந்திரங்களை பதிவு செய்து இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்

ADVERTISEMENT

என அரியலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT