அரியலூர்

உழவன் செயலியில் இ-சந்தை அறிமுகம்

2nd May 2020 08:06 PM

ADVERTISEMENT

உழவன் செயலில் இ-சந்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரியலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்குக்கு இடையே, வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்வதில் உள்ள தடைகளை தவிா்க்கும்வகையில், தமிழக அரசின் உழவன் செயலியில் இ-சந்தை எனும் கட்டணம் இல்லா சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், விவசாயிகள் நேரடியாக வியாபாரிகளைத் தொடா்பு கொண்டு வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்ய இயலும். விவசாயிகள் பதிவுசெய்துள்ள விளைபொருள்களை இந்தச் செயலி மூலம் வியாபாரிகள் பாா்த்து தங்கள் விருப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். உடனடியாக வியாபாரியின் தொடா்பு எண் விவசாயிக்கு உழவன் செயலி மூலம் தெரிவிக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT