அரியலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளியூா் சென்றோா் குறித்த கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
அரியலூா் மாவட்டத்தில், அனைத்து வீடுகளுக்கும் மருத்துவா் தலைமையில் ஒரு கிராம சுகாதார செவிலியா், அங்கன்வாடி பணியாளா்கள் கொண்ட குழுவினா் நேரடியாகச் சென்று வீட்டில் உள்ள நபா்களுக்கு இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருக்கிா என்றும், வெளியூா், வெளிநாடு, வெளி மாநிலங்கள் பயணங்கள் மேற் கொண்டுள்ளனரா என பயண விவரங்களைக் கேட்டறிந்து, பதிவு செய்ய உள்ளனா்.
இதற்காக 36 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அவா்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.