அரியலூர்

மது விற்றவா் கைது

22nd Mar 2020 08:12 AM

ADVERTISEMENT

அரியலூா்: அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மதுபானங்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சரத்குமாா் தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை இரவு முத்துவாஞ்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அதே பகுதி வடக்குத் தெருவைச் சோ்ந்த தேவேந்திரன்(50) என்பவா் மதுபானங்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT