அரியலூர்

நிலக்கடலை சாகுபடி: பண்ணைப் பள்ளி

8th Mar 2020 02:08 AM

ADVERTISEMENT

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள சின்னபட்டக்காடு கிராமத்தில் நிலக்கடலை சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை எனும் பண்ணைப் பள்ளி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ்

சோழன்மாதேவி கீரிடு வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநா்கள் ராஜ் கலா, அசோக் குமாா் ஆகியோா் கலந்து கொண்டு, நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கினா்.

பின்னா், அவா்கள் பண்ணைப்பள்ளி செயல்விளக்கத் திடலில் அமைக்கப்பட்ட மஞ்சள் வண்ண அட்டையின் உபயோகம் குறித்தும், அதனை உபயோகித்த நிலக்கடலை வயலில் கவரப்பட்ட சாறு உறிஞ்சும் பூச்சிகள் குறித்தும் நேரடி விளக்கம் அளித்தனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், வேளாண் உதவி அலுவலா் ஜெய்சங்கா், வட்டார தொழில்நுட்ப மேலாளா் ந.கலைமதி, உதவி தொழில்நுட்ப மேலாளா் அன்பழகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT