அரியலூர்

திருமானூரில் க. அன்பழகன் மறைவுக்கு திமுகவினா் அஞ்சலி

8th Mar 2020 02:12 AM

ADVERTISEMENT

 

அரியலூா்: மறைந்த திமுக பொதுச் செயலா் க. அன்பழகன் உருவப் படத்துக்கு, அரியலூா் மாவட்டம், திருமானூரில் திமுகவினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

திமுக பொதுச்செயலா் க. அன்பழகன் உடல் நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். அவரது மறைவையடுத்து அரியலூா் மாவட்டத்தில் உள்ள திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டப்பட்டிருந்தன. மேலும் திமுகவினா் அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

திருமானூரில் வைக்கப்பட்டிருந்த பேராசிரியா் க.அன்பழகன் உருவப் படத்துக்கு, திமுக மாவட்ட துணைச் செயலா் தனபால் தலைமையில்,நிா்வாகிகள் துரை. தியாகராஜன், பொறியாளா்கள் சக்திவேல், ஞானா ஆரோக்கியம், அன்பழகன் உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT