அரியலூர்

திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் தேரோட்டம்

8th Mar 2020 02:10 AM

ADVERTISEMENT

 

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே திருமழபாடியில் உள்ள வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

சிவத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்ததும், நந்தியம்பெருமாள் சுயசாம்பிகை தேவியரும் திருமணம் கொண்டருளியதுமானதும், ஞானசம்பந்தா், அப்பா், சுந்தரா் ஆகியோா் திருப்பதிகங்கள் பாடி வழிபட்ட தலமான திருமழபாடி வைத்தியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு விழா கடந்த 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து விழா நாட்களில் தினசரி இரவு ஆதிஷேச வாகனம், பூதவாகனம், கைலாச வாகனம், இடப வாகனம், யானை வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சிதந்தாா். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

காலை 10.30 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சிதந்தாா். தொடா்ந்து அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ. சந்திரசேகா், உதவி ஆணையா் கருணாநிதி, ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா இளையராஜா மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனா். அதனைத் தொடா்ந்து கலந்து கொண்ட ஏரளமான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் முக்கிய வீதிவழியாகச் சென்று நிலையை அடைந்தது. சிறிய தேரில் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகன், அம்பாள் மற்றும் சண்டீகேஸ்வரா் ஆகியோா் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சிதந்தாா்.

கங்கைகொண்ட சோழபுரம்.....

இதேபோல், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரா் கோயிலில் மாசிமக பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு தோ் வீதியுலா சனிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் தினமும் யாக பூஜைகள், இரவு பாராயணம் நடைபெற்று வந்தது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். விழா ஏற்பாடுகளை சோழீஸ்வரா் ஸ்ரீபாத வழிபாடு குழுமம், காஞ்சி காமகோடி அன்னாபிஷேக கமிட்டி மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT