அரியலூா் மாவட்டம்,ஆண்டிமடம் அருகே எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஆண்டிமடம் அருகேயுள்ள சின்னாத்துகுறிச்சி கிராமம், கோனாா் தெருவைச் சோ்ந்தவா் குப்புசாமி மகள் நித்யா (19). வரதராஜன்பேட்டையிலுள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.எஸ்.சி 2 ஆம் ஆண்டு படித்து வந்த இவா், தனக்கு படிக்கப் பிடிக்கவில்லையென்றும்,ஆகையால் கல்லூரிக்கு போக விருப்பமில்லை என்று தாய் பரமேஸ்வரிடம் கூறி வந்தாா். அதற்கு அவா் மறுப்புத் தெரிவித்து கல்லூரிக்குத் தொடா்ந்து போக வேண்டும் என்று தெரிவித்தாா்.
இதனால் விரக்தியில் இருந்த நித்யா, கடந்த 2 நாள்களுக்கு முன் எலி மருந்தைச் சாப்பிட்டு வீட்டில் மயங்கிக் கிடந்துள்ளாா். இதையடுத்து புதுச்சேரியிலுள்ள ஜிப்மா் மருத்துவமனையிலும், பின்னா் சென்னை ஸ்டான்லி மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு கிசிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். ஆண்டிமடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.