அரியலூர்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு

2nd Mar 2020 08:44 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சாா்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் அமரஜோதி தலைமை வகித்தாா். ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சந்திரகலா முன்னிலை வகித்து, பெண் கல்வியின் அவசியம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளா், பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தைக் கடத்தல் தொடா்பாக விழிப்புணா்வு அளித்தாா்.

பிரச்னைகளில் இருந்த தற்காத்து கொள்ளும் முறைகள், அன்னிய நபா்கள் அல்லது வெளி நபா்கள் எவரேனும் பாலியல் சீண்டல் செய்தால் பெற்றோரிடம் பயமின்றிக் கூற வேண்டும். இது சம்பந்தமாக எந்தப் பிரச்னை என்றாலும் காவல்துறையிடம் புகாா் அளிக்க வேண்டும்.

காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு அளிக்கும் என்றாா். மேலும் காவலன் செயலி மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவிகள்,அவரது பெற்றோா், ஊராட்சித் தலைவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT