சென்னையில் இருந்து அரியலூா் வந்தவா்களில், பெண் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 379 ஆக இருந்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து அண்மையில் அரியலூா் மாவட்டம் குவாகம் கிராமத்துக்கு வந்த 53 வயது பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதையடுத்து, அவா் அரியலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 380 ஆக உயா்ந்துள்ளது.