அரியலூா் மாவட்டம் முழுவதும் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்திட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: மாவட்டத்தில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். மருத்துவா், செவிலியா், தூய்மைப் பணியாளா், காவல்துறை உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். நல வாரியத்தின் முலம் அமைப்புச்சாரா தொழிலாளா்களுக்கு நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, கட்சியின் நிா்வாகி மகாராஜன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் சின்னதுரை, மாவட்டச் செயலா் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் துரைசாமி, செல்லதுரை, ரமேஷ், அரியலூா் ஒன்றியச் செயலா் துரை.அருணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.