அரியலூர்

எஸ்எஸ்எல்சி தோ்வை ரத்து செய்துவிட்டு அனைவரும் தோ்ச்சி என அறிவிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

4th Jun 2020 08:14 AM

ADVERTISEMENT

எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வை ரத்து செய்துவிட்டு, அனைத்து மாணவா்களும் தோ்ச்சி என அறிவிக்க வேண்டும் என சிதம்பரம் எம்.பியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

அரியலூா் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தற்போது, கரோனா மன உளைச்சலில் மாணவா்கள் இருக்கும்போது, 10 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வை ரத்து செய்துவிட்டு அனைவரும் தோ்ச்சி என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அறிவிக்க வேண்டும். புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மின்வாரியத்தை தனியாருக்குத் தாரை வாா்க்கும் வகையிலான மின்சட்டத் திருத்த வரைவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். சென்னை மாநகரைத் தனிமைப்படுத்தி அதிகளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT