அரியலூர்

சாலை போக்குவரத்து விதிகள் பயிற்சிப் பள்ளி

31st Jul 2020 08:07 AM

ADVERTISEMENT

அரியலூா் அரசு சிமென்ட் ஆலை வளாகத்தில் வியாழக்கிழமை சாலை போக்குவரத்து விதிகள் விழிப்புணா்வுப் பயிற்சிப் பள்ளியை, திருச்சி மண்டல காவல் துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா தொடங்கி வைத்தாா்.

அரியலூா் அடுத்த கயா்லபாத் கிராமத்தில் உள்ள அரசு சிமென்ட் ஆலை வளாகத்தில் மாவட்டக் காவல் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து விழிப்புணா்வு பயிற்சி பள்ளியை குத்துவிளக்கேற்றி தொடக்க வைத்த அவா் பயிற்சி பள்ளியை பாா்வையிட்டு பயிற்சி விதிமுறைகள், விழிப்புணா்வு விடியோக்கள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், போக்குவரத்து விதிகளை அனைவரும் கட்டாயம் கடைப்பிடித்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாசன், போக்குவரத்து ஆய்வாளா் மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT