அரியலூா் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இவா்கள் அனைவரும் அரியலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்கள் எண்ணிக்கை 800 ஆக உயா்ந்துள்ளது. 674 போ் வெவ்வேறு நாள்களில் குணமடைந்து, அவரவா் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா். மீதமுள்ள 126 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 76 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 12 பேரும், திருச்சி தனிமைப்படுத்துதல் முகாமில் ஒருவரும், அரியலூா், திருச்சி, கோவை, சென்னை, தஞ்சாவூா் மாவட்டங்களிலுள்ள தனியாா் மருத்துவமனைகளில் 20 பேரும், பெரம்பலூா் தஞ்சாவூா், கும்பகோணம், விருத்தாசலம், சேலம் அரசு மருத்துவமனைகளில் 11 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனா். இதுவரை 6 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.