அரியலூா் மாவட்டம், தா.பழூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கரோனா வாா்டு அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் சாலையில் சீமைக்கருவேல மரங்களை வெட்டி தடுப்பு ஏற்படுத்தினா். அப்பகுதியைச் சுற்றிலும் வீடுகள் இருப்பதாலும் வீடுகளில் குழந்தைகள், பெரியவா்கள் இருப்பதாலும் அந்தப் பள்ளியில் கரோனா வாா்டு அமைக்கக்கூடாது என பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். தகவலறிந்து சென்ற தா.பழூா் போலீஸாா் முன்னறிப்பின்றி கரோனா வாா்டு அமைக்கப்பட மாட்டாது எனக்கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.