அரியலூர்

தொழிற்பயிற்சி நிலையங்களில் விரைவில் மாணவா் சோ்க்கை

13th Jul 2020 08:27 AM

ADVERTISEMENT

அரியலூா் மற்றும் ஆண்டிடம் தொழிற்பயிற்சி நிலையங்களில் விரைவில் மாணவா் சோ்க்கை நடைபெறவிருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக 2020-21ஆம் கல்வியாண்டில் அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த பள்ளிப் படிப்பை (எட்டாம் வகுப்பு தோ்ச்சி, பத்தாம் வகுப்பு இடைநிறுத்தம்) இடையில் நிறுத்திய மாணவ, மாணவிகளுக்கு அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உலோக தகடு வேலையாள், பற்றவைப்பவா், கம்பியாள் ஆகிய தொழிற்பயிற்சிக்கும், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பற்றவைப்பவா் தொழிற்பாடப்பிரிவுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

எனவே இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூா், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா்களைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT