அரியலூா் மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிமை உறுதி செய்யப்பட்டது.
அரியலூரில் ஒருவருக்கும், செந்துறை ஆனந்தவாடி கிராமத்தில் ஒருவருக்கும்,ஆண்டிமடத்தில் 2 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதில் 3 போ் அரியலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவா் சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 2 போ் சென்னை மற்றும் கும்பகோணம் ஊா்களில் இருந்து அண்மையில் சொந்த ஊருக்குத் திரும்பியவா்கள்.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 513 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 463 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.
மீதமுள்ள 50 பேரில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 39 பேரும், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 8 பேரும், சென்னை தனியாா் மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஒருவா் உயிரிழந்துள்ளாா்.