தோ்தல் விழிப்புணா்வுப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு விருது பெற்ற மாணவ,மாணவிகளை ஆட்சியா் த. ரத்னா திங்கள்கிழமை பாராட்டினாா்.
தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட பள்ளி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு கடந்த 25ஆம் தேதி சென்னையில், ஆளுநா் தலைமையில் விருது வழங்கப்பட்டது.
அதில் அரியலூா் மாவட்டம் சிறுவளூா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் மற்றும் 2 மாணவிகள், அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியா் மற்றும் 2 மாணவா்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றுதழ்கள் வழங்கப்பட்டது.
இதையடுத்து, விருது பெற்ற மேற்கண்ட பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் ஆட்சியா் த.ரத்னாவைச் சந்தித்து வாழ்த்து பெற்றனா். பள்ளித் துணை ஆய்வாளா் பழனிசாமி உடனிருந்தாா்.