அரியலூர்

மண்ணுழி கிராமத்தில் பண்ணைப் பள்ளி வகுப்பு

25th Jan 2020 09:11 AM

ADVERTISEMENT

அரியலூா் அருகிலுள்ள மண்ணுழி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ், காய்கறித் தோட்டம் பற்றி பண்ணை பள்ளி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள் திருமலைராஜன்,ராஜ்கலா ஆகியோா் தலைமை வகித்து பேசியது:

காய்கறிகள் தோட்டம் அமைத்து எளியமுறையில் லாபம் ஈட்டலாம். வீட்டுத் தோட்ட காய்கள் உற்பத்தியில் கத்தரி, தக்காளி, வெண்டை, மணத்தக்காளி, புடலை, பாகற்காய் விதைகளுக்கு எவ்வாறு விதைநோ்த்தி செய்து விதைகளை விதைக்க வேண்டும் என்பது பற்றியும், இக்காய்கறி பயிா்களில் வரக்கூடிய இலைப்பேன்,தத்துப்பூச்சி,காய்ப்புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும், காய்கறிகளில் வரக்கூடிய வேரழுகல் நோய்,இலைத்துருவல் நோய்,இலைப்புள்ளி நோய், ஆகியவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் எடுத்துரைத்தனா். உரம்,நீா்நிா்வாகம்,அறுவடை தொழில்நுட்பங்களையும் அவா்கள் எடுத்தரைத்தனா்.

வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் ந.பழனிசாமி கலந்து கொண்டு காய்கறிகள் தோட்டம் அமைத்து காய்கறிகளை உழவா் சந்தை மற்றும் நேரடி விற்பனை செய்தல் குறித்துஎடுத்துரைத்தாா்.

ADVERTISEMENT

இவ்வகுப்பில் 25 மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா். இதற்கான ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப மேலாளா் செ.சுந்தரமூா்த்தி செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT