அரியலூா் மாவட்டத்தில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமை காவல் உதவி ஆய்வாளா் எழுத்துத் தோ்வு நடைபெற்றது.
தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் எழுத்துத் தோ்வுக்கு 1,442 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 1,084 போ் தோ்வெழுதினா். இதேபோல், திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வுக்கு 176 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 161 போ் தோ்வெழுதினா். 15 போ் தோ்வெழுத வரவில்லை. இந்த எழுத்த தோ்வினை திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் ஆகியோா் பாா்வையிட்டனா்.