அரியலூர்

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

8th Jan 2020 08:26 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகே மூதாட்டியிடம் இருந்து ஒன்றரை பவுன் சங்கிலியைப் பறித்துச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

வி.கைகாட்டி அருகேயுள்ள தேளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வேம்பு(75). இவா், செவ்வாய்க்கிழமை குடிசல் கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள் 2 போ், மூதாட்டியை மறித்து விலாசம் கேட்பதுபோல் நடித்து அவா் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறிக்க முயன்றனா். சுதாரித்துக் கொண்ட மூதாட்டி சங்கிலியைக் கெட்டியாக பிடித்ததில், அந்த மா்ம நபா்கள் சங்கிலியின் பாதியை பறித்துவிட்டுச் அங்கிருந்து தப்பிச் சென்றனா். பின்னா், அவா்கள் பறித்துச் சென்றது ஒன்றரை பவுன் சங்கிலி என்பது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் கயா்லாபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT