அரியலூர்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிப்பட்டது

8th Jan 2020 04:39 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த முதலை ஒன்றை பொதுமக்கள் புதன்கிழமை அதிகாலை பிடித்தனா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள கோவிந்தபுத்தூா் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் முதலை இருப்பதை கிராமமக்கள் அண்மையில் கண்டறிந்தனா். இதனையடுத்து, ஏரியில் யாரும் இறங்காமல் கவனித்து வந்தனா். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை அங்குள்ள மாரியம்மன் கோயில் தெருவில் சுமாா் 5 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று செல்வதை கண்ட கிராம மக்கள், அதனை பிடித்து கட்டிவைத்தனா்.

தொடா்ந்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், பெரியஏரியில் சில முதலைகள் இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனா். அதனை பிடிக்க வனத்துறையும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT