அரியலூா் மாவட்டத்திலுள்ள 6 ஒன்றியங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை அந்தந்த மையங்களில் இன்று( ஜன.2) நடைபெறுகிறது.
அரியலூா் மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 113 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 201 கிராம ஊராட்சி தலைவா், 1,662 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது.
அரியலூா்,திருமானூா்,செந்துறை ஒன்றியங்களில் டிச.27 ஆம் தேதியும்,ஜயங்கொண்டம்,ஆண்டிமடம்,தா.பழூா் ஒன்றியங்களில் டிச.30 ஆம் தேதியும் ஊரக உள்ளாட்சி தோ்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணும் மையங்கள்:அரியலூா் ஒன்றியப் பகுதிகளில் பதிவான வாக்குகள் அரியலூா் அரசு கலைக் கல்லூரியிலும், திருமானூா் ஒன்றியப் பகுதிகளில் பதிவான வாக்குகள் கீழப்பழுவூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும்,ஜயங்கொண்டம் ஒன்றியப் பகுதிகளில் பதிவான வாக்குகள் ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,ஆண்டிமடம் ஒன்றியப் பகுதிகளில் பதிவான வாக்குகள் விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், தா.பழூா் ஒன்றியப் பகுதிகளில் பதிவான வாக்குகள் தா.பழூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணப்படுகின்றன.
அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாருடன் ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.