அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே அடுப்பில்லாமல் தயாரித்த உணவுகள் கிராம மக்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன.
திருமானூா் அருகேயுள்ள குமாரமங்கலம் கிராமத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாா் நினைவு தினத்தையொட்டி ‘நோ ஆயில் நோ பாயில்‘ என்ற முறையில் அடுப்பில்லாமல், எண்ணெய் இல்லாமல் தயாரித்த உணவு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது அடுப்பில்லாமல் தயாரித்த உணவுகளான அவல் சா்க்கரைப் பொங்கல், எளிய முறையில் தயாரிக்கப்பட்ட பழச்சாறு ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க. சண்முக சுந்தரம் செய்தாா். கிராம மக்கள் பலா் கலந்து கொண்டனா்.