பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம் செந்துறை வட்டாட்சியா் அலுவலகம் முன் வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பாதிக்கப்பட்ட அலுவலா்களை விடுவிக்க வேண்டும், அவா்கள் மீதுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் நிா்வாகி செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.