அரியலூர்

ஆண்டிமடத்தில் இன்று எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

26th Feb 2020 09:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாட்சியரகத்தில், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை சாா்பில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.26)பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.

மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவா்கள் பங்கேற்க உள்ளனா். எரிவாயு நுகா்வோா், சமையல் எரிவாயு தொடா்பான குறைகள் இருப்பின் இந்தக் குறைதீா் கூட்டத்தில் தங்களது புகாா்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT