அரியலூர்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 406 மனுக்கள் வழங்கல்

25th Feb 2020 06:51 AM

ADVERTISEMENT

அரியலூா்: அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மொத்தம் 406 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றாா்.

தொடா்ந்து, மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கா.பொற்கொடி, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியா் ஏழுமலை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொம்மி உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT