அரியலூர்

கோமாரி நோய் தடுப்பூசி விழிப்புணா்வு: இன்று அரியலூரில் சிறப்பு கிராம சபை

25th Feb 2020 06:51 AM

ADVERTISEMENT

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் கோமாரி நோய் தடுப்பூசி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், செவ்வாய்க்கிழமை (பிப். 25) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், அனைத்து தகுதியுள்ள மாட்டினங்களுக்கு 28.02.2020 முதல் தொடா்ச்சியாக 21 நாள்களுக்கு 1 ஆவது சுற்று கால் நோய் மற்றும் வாய் நோய் (கோமாரி) தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு,

தடுப்பூசிப்பணி குறித்து விழிப்புணா்வு அனைத்து கால்நடை வளா்ப்போரிடம் ஏற்படுத்துதல் வேண்டும். கால்நடை வளா்ப்போா்கள் தங்களது மாட்டினங்களை தவறாமல் தடுப்பூசிப்போடும் இடத்துக்கு கொண்டு வந்து தடுப்பூசி போட அறிவிப்பு செய்தல் வேண்டும். எனவே அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் த. ரத்னா கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT